தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கம் திரைப்படத்திற்காக வெளிநாடு சென்று தற்போது சிம்பு தன்னுடைய உடலை பிட்டாக வைத்துள்ளார்.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து சிம்புவின் புதிய லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த சிம்பு போன்று காணப்பட்டார். தாடி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் சிம்புவை பார்த்த ரசிகர்கள் எஸ் டி ஆர் 48 திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்பொழுது இந்தப் படத்தை குறித்த முழு அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இதில் சிம்பு அண்ணன், தம்பி இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லனாகவும் முட்டி மோத போகிறார் என கூறப்படுகிறது. இதுவரை எஸ்டிஆர் நடிப்பில் வெளியான படங்களில் இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கக்கூடிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல இந்த படத்தில் சிம்பு மற்றும் ஏஆர் ரகுமான் இருவரும் 6-வது முறையாக STR 48 படத்தில் இணையபோகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு அணிந்திருக்கும் சர்ட் விலை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி STR ஒர்கவுட் பண்ணும் பொழுது மஞ்சள் நிற சர்ட் ஒன்றை அணிந்திருந்தார். அந்த சர்ட் versace brand ஐ சேர்ந்தது என்றும், அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1, 05, 953 ரூபாயாம். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…