நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. கமல் வார இதழில் எழுதிய தாயம் என்று சிறுகதையை அடிப்படையாக கொண்டு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படம்தான் ஆளவந்தான். நந்து என்ற மனநலம் பாதித்த முரடனாகவும், விஜய் என்ற மிலிட்ரி ஆபிசராகவும் கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.
டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இதில் நந்து கேரக்டரில் நடித்த கமல் 20 கிலோ எடை அதிகம் கொண்டவராகவும், விஜய் கேரக்டரில் நடித்த கமல் சரியான உடல் தோற்றத்திலும் இருப்பார். அதற்காக இந்த 2 கேரக்டர்களிலும் நடிக்க, விஜய் கேரக்டரில் நடித்துவிட்டு பின் 6 மாதம் இடைவெளி விட்டு நந்து கேரக்டரில் அதிக உடல் எடையுடன் நடித்திருக்கிறார் கமல்.
காஷ்மீரில் நடக்கும் கதை என்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்த பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி கிடைக்கவில்லை. இந்த படத்துக்காக, சென்னையிலேயே காஷ்மீர் ஷெட் போட்டு பலநூறு மூட்டைகள் கல் உப்பு வாங்கி கொட்டி, அதன்மீது தெர்மாகூல் உருண்டைகளை கொட்டி, பனிப்பிரதேசம் போல் பிரசாத் ஸ்டுடியோவில் காஷ்மீர் ஷெட் அமைத்து படம் பிடித்துள்ளனர். நந்து கேரக்டர் கமல் உடலில் அதிகாலை 4 மணி முதல் புல் ஏசியில் படம் வரைய ஆரம்பித்தால், அது முடிய 3 மணி நேரம் ஆகியுள்ளது. அந்த படம் உடலில் வியர்வை வழிந்து அழியாமல் தவிர்க்க, கமல் படப்பிடிப்புக்கு தளத்துக்கு 10 நிமிடம் நடந்து செல்லும்வரை 3, 4 பேர் ஏர்கூலரை பிடித்தபடி சுற்றி நடந்து சென்று, உடலில் இருந்த ஓவியம் அழியாமல் தவிர்த்துள்ளனர்.
ஆளவந்தான் படத்தில் ஆறு மாத இடைவெளியில் இரண்டு கேரக்டரில் நடித்ததால், அந்த காட்சியின் தொடர்ச்சிக்காக படக்குழு செய்திருந்த டெக்னிக்கல் விஷயங்களை பார்த்து பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ மிரண்ட போய்விட்டாராம். கில் பில் என்ற வெற்றிப்படத்தை எடுத்த அவர், ஆளவந்தான் படத்தை பார்த்துதான் இந்த படத்தை எடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட ஆளவந்தான் படம், மீண்டும் புதுப்பொலிவுடன், படத்தின் தேவையற்ற 30 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு, விரைவில் திரைக்கு வருகிறது. தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் இந்த படத்தை திரையிட படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…