#image_title
பிரபல நடிகரான சிம்பு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அஸ்வத் கடந்த 2020-ஆம் ஆண்டு ரிலீசான ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். அஸ்வத் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. தம் படத்தில் கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் என்ற பாடலில் கையில் கை குட்டை கட்டி சிம்பு ஒரு போஸ் கொடுப்பார்.
அதேபோல போட்டோவை வெளியிட்டு கட்டம் கட்டி கலக்குறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் மகத் சிம்பு படங்கள் தொடர்பான அனைத்து வேலைகளையும் கவனித்து வந்தார். இப்போது அவர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். தனது பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதனால் சிம்புவுக்கு தனியாக மேனேஜரை அப்பாயிண்ட் செய்துள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் சிம்பு படம் என்றாலே அதற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை அனிருத்தை வைத்து இசையமைக்கலாம் என பல குழுவினர் முடிவு செய்திருக்கிறார்களாம். தனது நெருங்கிய நண்பர் மகத் பிசியாகிவிட்டார். மற்றொருபுறம் தனது ஆஸ்தான இசையமைப்பாளரும் இந்த படத்தில் இல்லை இருந்தாலும் சிம்பு ஆக்ஷனில் இறங்கி தனது சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான கானா வினோத், இறுதிப் போட்டி வரை செல்லும் வாய்ப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக ஒரு நூதனமான தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காகச் சென்ற மூதாட்டி ஒருவர், எதிர்பாராத…
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அதிமுக கூட்டணியில் அங்கம்…
நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான 'ஜன நாயகன்', தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.…