தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கம் திரைப்படத்திற்காக வெளிநாடு சென்று தற்போது சிம்பு தன்னுடைய உடலை பிட்டாக வைத்துள்ளார்.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து சிம்புவின் புதிய லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த சிம்பு போன்று காணப்பட்டார்.
தாடி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் சிம்புவை பார்த்த ரசிகர்கள் எஸ் டி ஆர் 48 திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்று கூறி வருகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்பொழுது இந்தப் படத்தை குறித்த முழு அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இதில் சிம்பு அண்ணன், தம்பி இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லனாகவும் முட்டி மோத போகிறார் என கூறப்படுகிறது.
இதுவரை எஸ்டிஆர் நடிப்பில் வெளியான படங்களில் இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கக்கூடிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல இந்த படத்தில் சிம்பு மற்றும் ஏஆர் ரகுமான் இருவரும் 6-வது முறையாக STR 48 படத்தில் இணையபோகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு மாஸான லுக்கில் வலம் வரும் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…