#image_title
சங்கர் இயக்கத்தில் வெளியாக போகும் இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு நடிகர் சித்தார்த் வரமாட்டேன் என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தில் நடிகை சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில், கவுண்டமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
பல ஆண்டுகள் கழித்து இப்பொழுது அதன் 2-வது பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் சங்கர். இந்த படம் வருகிற ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஐ மற்றும் எந்திரன் 2 திரைப்படங்கள் அந்த அளவுக்கு சரியாக ஓடவில்லை .
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல தடைகளை தாண்டி தற்போது வெளியாக உள்ளது. கமலஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, சூர்யா, விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றார்கள். அனிருத் இசையில் வெளியான பாடல் சுமாராக இருந்த நிலையில் தற்போது சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் நடிப்பில் உருவாகின்ற நீலோற்பம் என்ற பாடல் சுத்தமாகவே ரசிகர்களை கவரவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சித்தார்த் இந்த ஆடியோ லாஞ்சுக்கு வர மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கமலுக்கு கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம் தனக்கும் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டதாகவும், அதற்கு மறுத்த காரணத்தினால் ஆடியோ லான்ச்சுக்கு வர முடியாது என்று சித்தார்த் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தன்னை அறிமுகம் செய்த சங்கரிடமே சித்தார்த் இப்படி ஈகோ காட்டலாமா என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் சங்கர் மற்றும் கமலஹாசனிடம் சித்தார்த்துக்கு எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை. தயாரிப்பு குழுவினருடன் தான் அவருக்கு ஏதாவது மனக்கசப்பு இருக்கும் என்றும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆடியோ லான்ச்சுக்கு சித்தார்த் வருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…