Categories: சினிமா

எனக்குன்னு சொந்தமா வீடு, நிலம் கூட இல்ல.. இதுவரைக்கும் நா சம்பாரிச்ச பணத்தை.. மனம் திறந்த சித்தார்த்..!

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சித்தார்த். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் மிக சிறந்த படமாக மாறியது. தானே தயாரித்து நடித்த சித்தார்த்துக்கு நல்ல லாபத்தை அந்த திரைப்படம் பெற்று தந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அதிக அளவிலான ட்ரோல்களை சந்தித்தது. இதனை தொடர்ந்து செவன் மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பாக சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் missyou .

இயக்குனர் ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா உள்ளிட்ட பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைக்கும்  இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், இப்ப இருக்க இளைஞர்கள் யாராவது சினிமாவுக்கு வரேன்னு சொன்னா கண்டிப்பா நான் வேண்டான்னு தான் சொல்லுவேன். மியூசிக் கூட பண்ணிட்டு போயிடலாம் ஆனா நடிக்க வேண்டாம் என்று தான் நான் சொல்லுவேன். 22 வருஷத்துல நான் கருப்பு பணத்தை தொட்டதே கிடையாது. எங்கிட்ட நிலம் மற்றும் வீடு என எதுவுமே இல்ல. எல்லாமே என்னுடைய சேமிப்பு மட்டும்தான். இதுவரைக்கும் எனக்கு சொந்த வீடு கிடையாது. என்கிட்ட ஒண்ணுமே இல்ல. நான் ஒரு self funding ப்ரொடியூசர். சித்தா படத்திற்கான ஒவ்வொரு பைசாவும் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம். அத போட்டு தான் படம் எடுத்தேன். சினிமாவில் இருந்து வந்தது சினிமாவுக்குள்ள தான் போகணும். எனக்குன்னு ஒண்ணுமே இல்லை என்ற சித்தார்த்த பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

11 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

11 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

12 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

12 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago