‘மகளுடன் கொண்டாடும் முதல் திருமண நாள்’ … அழகிய புகைப்படங்களுடன் எமோஷனல் பதிவு வெளியிட்ட சீரியல் நடிகர் செந்தில்…

By Begam on ஆடி 22, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த சீரியல் அந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அதில் ஹீரோவாக நடிகர் செந்திலும் மற்றும் ஹீரோயினாக ஸ்ரீஜாவும் நடித்து இருந்தார்கள்.இந்த சீரியல் மூலம்  இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

   

இவர்கள் இருவரும் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து 2014ல்  திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் இந்த சீரியலுக்கு பிறகு நடிகர் செந்திலுக்கு  வெள்ளித்திரை பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இவர் தவமாய் தவமிருந்து, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு என சில படங்களில் நடித்துள்ளார்.

   

 

திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ‘மாப்பிள்ளை’ என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர். மேலும் ‘கல்யாணம்: கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற வெப் சீரிசில் நடித்தனர். இதைத்தொடர்ந்து திருமணமாகி 9வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா கர்ப்பம் அடைந்தார்.

சமீபத்தில் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் செந்தில். இவர் தற்பொழுது தனது குழந்தையுடன் கொண்டாடும் முதல் திருமண நாள் இது என்று கூறி எமோஷனலான பதிவு ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)