#image_title
தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
#image_title
இந்நிலையில் சத்ய்ராஜ் பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்த தகவல் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்யராஜை பொறுத்தவரை எல்லா ஊடகவியலாளர்களிடமும் நட்புடன் பழகுவாராம். அவரைப் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எதாவது எதிர்மறையாக எழுதிவிட்டால் அவரிடம் கோபித்துக் கொண்டு அவரிடம் பேசாமல் இருக்க மாட்டாராம். அதே போல அவர் எழுதியதற்கு விளக்கமும் கொடுக்க மாட்டாராம்.
அதே போல ஒரு பத்திரிக்கையாளர் அவரைப் பற்றி புகழ்ந்து எழுதினால், அவரை அழைத்து பாராட்டுவதும் கிடையாதாம். அவர்களுடனான நட்பு எந்த சிக்கலும் இல்லாமல் தொடருமாம்.
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…