சொந்த வீடு கனவா? சுமையா?.. ரசிகர்களின் மனதை வென்றதா 3BHK திரைப்படம்.. வெளியான X தள விமர்சனம்…!

Spread the love

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள 3BHK திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, நீதான் ரகுநாத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில் படத்திற்கு அம்ரீத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஆகியோர் மேற்கொண்டுள்ள நிலையில் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஷ்வா தயாரித்துள்ளார். ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் எக்ஸ் தள விமர்சனம் வெளியாகி உள்ளது.

சொந்த வீடு என்பது பலருடைய கனவாக இருக்கும். அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஒரே மிடில் கிளாஸ் ஃபேமிலியின் கதை தான் இந்த திரைப்படம். இவர்களின் சொந்த வீடு கனவு நிறைவானதா என்பது தான் படத்தின் கதை ஆகும். இந்த திரைப்படம் பார்வையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழ வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் ஒரு மனமுடையும் தருணத்தை விட சின்ன சின்னதாக ஆயிரக்கணக்கான மனமுடையும் தருணங்கள் தான் நாம் ஒவ்வொரு நாளும் சுமந்து கொண்டிருப்போம்.

இந்த படம் இவை அனைத்தையும் கொண்டு நகர்கிறது. இந்த திரைப்படத்தை மொத்தமாக பார்த்து முடித்த பிறகு ஒரு நம்பிக்கை உணர்வு அனைவருக்கும் வந்து விடும். ஒரு சில படங்கள் நம்மை ஊக்குவிக்கும். அதுபோன்ற படமாக தான் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. குடும்பத்தோடு சேர்ந்து பார்ப்பதற்கு மிக சிறந்த படமாகும். இந்த திரைப்படம் ஒவ்வொரு மிடில் கிளாஸ் இன் குடும்ப கதையை தத்ரூபமாக எடுத்துக்காட்டுகிறது. பல நிராகரிப்புகள், தோல்விகள் மற்றும் பின்னடைவு என்று எது வந்தாலும் ஒரு நாள் நம்முடைய வாழ்க்கை மாறாதா என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்போம்.

அந்த நாளுக்காக அனைவரும் கடினமாக உழைப்போம். நாம் தினந்தோறும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களையும் இந்த படம் அற்புதமாக பிரதிபலிக்கிறது. ஒரு கூடு கட்ட முயலும் அழகிய தூக்கணாங்குருவிகளாய் இந்த திரைப்படம் உள்ளது. கண்முன்னே அவர்களின் வாழ்க்கையை அழகிய தொகுப்பாய் இந்த திரைப்படம் காட்டுகிறது.

பெண்ணின் பிறந்த வீடு, ஒருபோதும் அவளுக்கு அன்னியமாகி போகாது, பாரமாகி விடாது என்று அழகாய் ஆழமாய் படத்தில் கதையை எடுத்துக் கூறியுள்ளனர். இன்றைய சூழலில் அவசியம் இந்த நம்பிக்கை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் இயக்குனர் அற்புதமாக இந்த படத்தில் அதனை எடுத்துக் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் திரைப்படம் குடும்பத்தினர் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

பணம் டபுள் ஆகணுமா…? போஸ்ட் ஆபீஸில் ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்…! மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!

மத்திய அரசின் உத்தரவாதம் கொண்ட 'கிசான் விகாஸ் பத்திரம்' (KVP) திட்டம், பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த…

26 minutes ago

BREAKING: அண்ணாமலைக்கு எம்பி பதவி… எல். முருகன் கொடுத்த அந்த க்ளு… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அந்த ஒரு முடிவு….!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன்…

29 minutes ago

டிகிரி படித்தவரா நீங்க…? கைநிறைய சம்பளத்துடன் யூனியன் வங்கியில் வேலை… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…!!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) 1,865 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு…

31 minutes ago

“நாடு முழுவதும் இன்று முதல் அமல்”… இனி ஆன்லைன் கேம் விளையாட ‘டைம் லிமிட்’… புதிய சட்டத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவல்…!

மத்திய அரசு இன்று (மே 1, 2026) முதல் அமல்படுத்தியுள்ள 'ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் 2026' (PROG Rules),…

36 minutes ago

உலகிற்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து?… ஈரானை அழிக்க டிரம்ப் தீட்டிய ரகசிய ‘மாஸ்டர் பிளான்’… கசிந்த ரகசிய போர் வரைபடம்…!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதது உலக…

43 minutes ago

ரூ.210 முதலீடு செய்தால் போதும்…! வயதான காலத்தில் கைநிறைய பென்ஷன் வாங்கலாம்… அசத்தலான மத்திய அரசு திட்டம்…!

மத்திய அரசின் 'அடல் ஓய்வூதியத் திட்டம்' (APY) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதுமையில் நிலையான வருமானத்தை உறுதி செய்யும் ஒரு சிறந்த…

46 minutes ago