மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை. வெள்ளம் முழுமையாக வடியாததால் பல பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. சென்னையின் பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். பல்வேறு சினிமா பிரபலங்கள் வெள்ளத்திலும் மக்களுக்கு உதவி செய்து வந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் பிரபல நடிகரான எஸ்வி சேகர் தனது வீட்டின் முன் உள்ள சாலையை தானே சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, அந்த வீடியோவில் ‘நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், விடாது பெய்த மழையிலும் வேலை பார்த்த தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியும்’ கூறியுள்ளார். ஆனால் அவரின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து கமண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…
கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…
பிரயாக்ராஜ் அருகே உள்ள கவுந்தியாரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்வா கலா கிராமத்தில் அனில் திவாரி என்பவர் தனது மனைவி…
மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில்,…