Categories: சினிமா

சினிமாவுக்காக அரசு வேலையை விட்டு நடிக்க வந்த பழம்பெரும் நடிகர்.. ஆர்.எஸ் மனோகர் பற்றி இதுவரை பலரும் அறியாத உண்மை தகவல்..!

Spread the love

இன்றைக்கு நடிகர் திலகம் என்று சொன்னாலே உலகமே சிவாஜி கணேசன் என அறிந்து கொள்கிறது. இப்படிதான் ராசிபுரம் பள்ளியில் லட்சுமி நரசிம்மன் என்ற சிறுவன் அரை நிஜார் பருவத்தில் இருக்கும் போது பள்ளி விழாவில் மனோகரா நாடகத்தில் நடித்தான். அன்று சிறுவனின் நடிப்பை பார்த்துவிட்டு ஆசிரியர்களும் மக்களும் சக மாணவர்களும் மனோகரா மனோகரா என்று அழைத்தனர். லட்சுமி நரசிம்மன் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆர் எஸ் மனோகர் என்று சொன்னால்தான் அந்த கம்பீர முகம் நம் கண் எதிரே வரும். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.

 

அப்படி நடிக்கும் போது பிற்காலத்தில் நாம் சினிமாவில் சேர போகிறோம், வில்லனாக கலக்க போகிறோம், நாடக உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழப் போகிறோம் என்பதெல்லாம் தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை.  தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் இவரை நம்மில் பல பேருக்கு தெரியும். 1925 ஆம் ஆண்டு தற்போதைய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிறந்தவர் அரசு வேலையில் பணியாற்றி கொண்டு சரித்திர நாடகங்கள் முதல் சமூக நாடகங்கள் வரை 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

 

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் வரவே தான் பார்த்துக் கொண்டிருந்த அரசு வேலையை உதறி தள்ளிவிட்டு 1951 ஆம் ஆண்டு ராஜாம்பாள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சில திரைப்படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அதன் பின் நாட்களில் குணசித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

 

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் மற்றும் ரஜினி என அப்போதைய பல முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து தனது நடிப்பு திறமையால் அசத்தியிருந்த ஆர்எஸ் மனோகர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 100க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்திருக்கிறார். இறுதியாக பாண்டியராஜன் இயக்கத்தில் மனைவி என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படி சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி மக்கள் மனதில் இடம் பிடித்த இவ்வாறு தனது 80 வயதில் 2005 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

Nanthini

Recent Posts

50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து… தலைக்குப்புற கவிழ்ந்து 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

12 minutes ago

பொம்மையை தாயாக நினைத்து வளர்ந்த குரங்கு… இன்று மற்ற குட்டிகளுக்கு பாதுகாவலனாக மாறிய அதிசயம்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…

18 minutes ago

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

45 minutes ago

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

1 மணத்தியாலம் ago

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

2 மணத்தியாலங்கள் ago