அந்த தப்ப பண்ணிருக்கக் கூடாது… ரோபோ சங்கரின் உயிரிழப்புக்கு உண்மை காரணம்… பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Spread the love

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் தனித்துவமான நகைச்சுவை மற்றும் ரசிகர்களின் அன்பை பெற்று புகழின் உச்சத்திற்கு சென்றவர்தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்ட நிலையில் சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். ஸ்டாண்ட் அப் காமெடி இன் என மேடை நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய சங்கர், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். அன்றாட பிசியான வாழ்க்கையில் சிரிப்பு மறந்த மக்களை தன்னுடைய காமெடி மூலமாக மகிழ வைத்தவர். இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கியிருந்த போதும் உடல் நல குறைவு மோசம் அடைந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் ரோபோ சங்கர் மரணம் குறித்து நடிகர் இளவரசு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, தன்னுடைய ஆரம்பகால நடன மேடை நிகழ்ச்சிகளில் சங்கர் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு பங்கேற்றார். அதனை அகற்றுவதற்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டதால் அவருடைய உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. தொடர்ந்து பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் தொடர்பால் தோல் முழுவதும் வலுவிழந்து அதுவே மஞ்சள் காமாலை நோய்க்கு காரணமாக அமைந்தது என்று இளவரசு விளக்கமளித்துள்ளார். இவர் கூறியுள்ள இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

18 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

28 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

37 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

45 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

55 minutes ago