Categories: சினிமா

காதல் மனைவியுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

Spread the love

காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் ஊட்டி சென்று அங்கிருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பயணித்து வந்திருந்தாலும் 2018 ஆம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப் பிரபலமானவர்தான் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அதைத்தொடர்ந்து தற்போது நகைச்சுவை காமெடி நடிகராக வலம் வருகிறார். ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் அதைத்தொடர்ந்து குரூப் டான்ஸராக சில திரைப்படங்களில் நடனமாடினார்.

அதைத் தொடர்ந்து அஜித்தின் அவள் வருவாளா திரைப்படத்தில் ருக்கு ருக்கு என்ற பாடலிலும் ஆடி இருக்கின்றார். ஆனாலும் நெல்சன் திரைப்படத்தில் தான் இவரை நம்மால் சிறந்த காமெடி நடிகராக பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து எல்கேஜி, கூர்க்கா, சிவகார்த்திகேயனுடன் டாக்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.  ரெடின் கிங்ஸ்லிக்கு தற்போது 45 வயது ஆகின்றது. சங்கீதாவை பொருத்தவரை சன் டிவி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கின்றார். அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் இவர் சினிமாவில் விஜயுடன் மாஸ்டர், சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், வீட்டில் விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.

இப்படி இருவரும் பிஸியாக இருந்து வரும் நிலையில் ஊட்டிக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்கள். அங்கு ஃப்லோடிங் ஃபக் என்ற ரெசார்ட்டில் தங்கி தங்களது மகிழ்ச்சியான விடுமுறையை அனுபவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கின்றார். பொதுவாக எந்த பிரபலங்களும் தங்களது மனைவியுடன் ப்ரோமோஷன் வீடியோக்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் மனைவியுடன் அங்கு சென்று என்ஜாய் செய்த தருணங்களை பகிர்ந்து அனைவரும் இந்த ரெசாரட்டை தேர்ந்தெடுங்கள் என்று ப்ரோமோஷன் செய்திருக்கின்றார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

5 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

12 minutes ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

27 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

32 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

38 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

41 minutes ago