நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சொந்த சகோதரர் ரவி ராகவேந்திரா. இவர் விசு படங்களில் நிறைய நடித்திருக்கிறார். இவரது மகன்தான் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரவி ராகவேந்திரா கூறியதாவது, நான் அப்போது கோயம்புத்தூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் எனது அம்மா எனக்கு போன் செய்து ஜில்லுவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்று சொன்னார்.
லதாவை வீட்டில் ஜில்லு என்று தான் கூப்பிடுவோம். திடீரென ஜில்லுவுக்கு திருமணம் என்றதும் எனக்கு ஒரே அதிர்ச்சியாகி விட்டது. மேலும் மாப்பிள்ளை ரஜினி என்று சொன்னார். எனக்கு கோபம் வந்துவிட்டது. நடிகர் ரஜினிகாந்த் தான் மாப்பிள்ளையா? உண்மையா சொல்றீங்களா? உங்களுக்கு என்ன பைத்தியமா என்று கேட்டு விட்டேன். ஏனென்றால் லதாவுக்கு அப்போ ரொம்ப சின்ன வயது. திடீரென்று திருமணம் என்று சொன்னவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
பிறகு வீட்டுக்கு வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அன்று இரவே வீட்டுக்கு வந்து விட்டேன். நான் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு சென்றால் அங்கே ரஜினிகாந்த் அமர்ந்திருக்கிறார் நானும் அவரும் மொட்டை மாடிக்கு சென்று தனியாக 20 நிமிடங்கள் பேசினோம். அப்போது அனைத்தையும் அவர் ஓப்பனாக சொன்னார். அவரது நேர்மையும் உண்மையும் எனக்கு பிடித்ததால் நானும் திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டேன் என்று ரவி ராகவேந்திரா கூறியிருக்கிறார்.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…