Categories: சினிமா

MGR, பாகவதரை விட அதிக வசூல்… தமிழ் சினிமாவில் சாதனைப் படைத்த பிரபல நடிகரின் படம்.. பலரும் அறியாத தகவல்

Spread the love

தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் படங்கள் தயாரிப்பதில் ஸ்டுடியோக்களின் ஆதிக்கம்தான் நிலவியது. ஜெமினி ஸ்டுடியோ, ஏவிஎம் ஸ்டுடியோ, வாஹினி ஸ்டுடியோ, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. அந்த காலத்தில் இத்தகைய ஸ்டுடியோக்கள் ஒரு பிராண்டாக இருந்தன.

இதில் ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ் எஸ் வாசன் மிகவும் தனித்துவமானவர். டெக்னாலஜி எதுவும் வளராத காலகட்டங்களில் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக பல லட்சங்கள் செலவழித்து, பிரம்மாண்ட செட் அமைத்து தனது படங்களை எடுப்பார். தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் அதன் நிறை குறைகளை பேசுவதை விட பிரம்மாண்டத்தைப் பார்த்து வாயடைக்க வேண்டும் என நினைப்பவர்.

அப்படி அவர் எடுத்த சந்திரலேகா, ஔவையார், மங்கம்மா சபதம் ஆகிய திரைப்படங்கள் இந்தியா முழுவதும் பேயோட்டம் ஓடின. இதில் மங்கம்மா சபதம் திரைப்படம் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே அதிக நாட்கள் ஓடிய படம். இந்த படம் வந்த போது தமிழ் சினிமாவில் அதுவரை எந்தவொரு திரைப்படமும் பண்ணாத வசூலை செய்ததாக சினிமா பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் ஒரு நேர்காணலிலே தெரிவித்துள்ளார்.

#image_title

இந்த படம் வெளியாகி ஓடிய போது 40 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாம். இந்த படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியால் ரஞ்சனுக்கு இந்தி சினிமாவில் எல்லாம் வாய்ப்புக் கிடைத்து அங்கு சில படங்களில் நடித்தார். இதே ரஞ்சன்தான் சந்திரலேகா படத்திலும் கொடூரமான வில்லனாக நடித்திருப்பார்.

இந்த படம்தான் தமிழ் சினிமாவில் அன்றுவரை அதிக வசூல் செய்த படமாக அமைந்ததாம். அதற்கு முன்னர் சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதரின் படம் கூட இவ்வளவு தொகை வசூலித்தது இல்லையாம். அப்படி ஒரு பென்ச் மார்க்கை இந்த படம் செட் செய்துள்ளது.

vinoth

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago