Categories: சினிமா

எத்தனையோ படம் நடித்திருந்தாலும் ஒரே படத்தால் இந்தியா லெவலில் பிரபலம் ஆகிட்டேன்… ராம்கி மகிழ்ச்சி!

Spread the love

தமிழ் சினிமாவில் 1980 களில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக மாறியவர் ராம்கி. சின்னப் பூவே மெல்லப் பேசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹேண்ட்சம் நடிகரான ராம்கி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.

அதன் பின்னர் வரிசையாக படங்களில் நடித்த அவருக்கு மருதுபாண்டி, செந்தூரப் பூவே, பறவைகள் பலவிதம், இணைந்த கைகள்,  வனஜா கிரிஜா உள்ளிட்ட படங்கள் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.  ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் மார்க்கெட்டில் நிலைக்க முடியவில்லை.

அதனால் அவருக்கு சினிமாவில் இருந்து ஒரு இடைவேளை விழுந்தது. பின்னர் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் சில படங்களில் தோன்றினார். ஆனால் எதுவுமே அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமையவில்லை.

அந்த சூழ்நிலையில்தான் கடந்த தீபாவளிக்கு வெளியான ல்க்கி பாஸ்கர் திரைப்படம் அவரை மீண்டும் லைம்லைட்டில் கொண்டுவந்துள்ளது. அந்த படத்தில் அவர்  நடித்த ஆண்டனி கதாபாத்திரம் மிகச்சிறிய ஒன்றாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் போல நம்பிக்கைக்குரிய ஒரு நண்பர் இருந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என மீம்கள் பரவி வருகின்றன.

இதுபற்றி பேசியுள்ள ராம்கி “லக்கி பாஸ்கர் படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆனதால், அதன் வெற்றி என்னை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் கொண்டு சென்றுள்ளது. படம் ரிலீஸானதில் இருந்து வாழ்த்துகளாகக் குவிகின்றன. இப்படி ஒரே நாளில் நான் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் சென்று சேர்வேன் என நினைத்ததேயில்லை.” எனக் கூறியுள்ளார்.

ராம்கி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் இப்போது அவருக்கு லக்கி பாஸ்கர் படத்தின் மூலமாகவே கிடைத்துள்ளது.

vinoth

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

3 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

3 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

3 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

3 மணத்தியாலங்கள் ago