Categories: சினிமா

நடிக்க வருவதற்கு முன்பு பஸ் கண்டக்டர் இல்ல, அதற்கு முன்னாடி ரஜினி இப்படி ஒரு வேலை செய்தாரா?.. அதுவும் 2 ரூபாய் சம்பளத்திற்கு..!!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் ரஜினி முதலில் பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்தார். தனது நண்பர்களுடன் நாடகங்களை பார்க்க போன அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் துரியோதனன் வேடத்தில் நடித்த போது ரசிகர்களிடமிருந்து அவருக்கு கைதட்டல் கிடைத்தது. உடனே ரஜினியின் நண்பர் பகதூர் நீ சென்னை போய் நடிப்பு கல்லூரியில் படித்துவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சி செய் என்று கூறி செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அப்படி சென்னைக்கு வந்த ரஜினியை ஒருமுறை பாலசந்தர் கல்லூரியில் சந்தித்த நிலையில் அவர் இயக்கி வந்த அபூர்வராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக ரஜினியை நடிக்க வைத்தார். அதன் பிறகு அடுத்தடுத்து ரஜினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு ரஜினி பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து இவரின் படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெற்ற நிலையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு கிடைத்தது. ஆனால் ரஜினி 16 வயதிலேயே படத்துக்கு 3000 ரூபாய் சம்பளத்திற்கு மட்டுமே பேசப்பட்டுள்ளார்.

அதன் பிறகு பல படங்களுக்கும் சில ஆயிரங்கள் மட்டுமே இவருக்கு கிடைத்தது. பிரியா படத்தில் நடிக்கும் போது 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் ரஜினிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளார். ரஜினி ஒரு லட்சம் சம்பளமாக வாங்கிய முதல் திரைப்படம் பிரியா. அதன் பிறகு லட்சங்கள் அதிகரித்து கோடியில் சம்பளம் வாங்கினார். தற்போது 100 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். ஆனால் பேருந்தில் வேலை செய்வதற்கு முன்பு ஒரு கன்னட பத்திரிக்கையில் பிழை திருத்தும் வேலையை ரஜினி செய்து வந்தார்.

அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தினமும் இரண்டு ரூபாய் மட்டுமே. அதாவது மாதத்திற்கு 60 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அப்படி வாங்கிய சம்பளத்தையும் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்து வைப்பது மற்றும் படம் பார்ப்பது என ரஜினி ஜாலியாக இருந்துள்ளார். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினி தற்போது ஒரு நாளைக்கு இரண்டு கோடியை சம்பளமாக வாங்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

Nanthini

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

9 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

13 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

39 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

59 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

1 மணத்தியாலம் ago