தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகின்றார். இவருடைய 170 ஆவது திரைப்படமான இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், பகத்பாஸில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே சமயம் படத்தின் டீசரையும் பட குழு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டீசரில் மீண்டும் கழுகு பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். இந்த டீசரின் பின்னணியில் கழுகு சத்தம் கேட்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு மற்றும் காக்கா கதை சர்ச்சையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜயின் பேச்சு இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் மீண்டும் இந்த படத்தின் டீசரில் கழுகு பிஜிஎம் மூலமாக புதிய பஞ்சாயத்தை கிளம்பியுள்ளது. இதன் மூலம் என்றைக்குமே நான்தான் கழுகு என ரஜினி கூற வருவதாக பல பேச்சுகளும் எழுந்துள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…