#image_title
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.
சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான். அவர் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்தர். ஆனால் அதுவே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து பிரதாப்தம் என்ற பெயரில் படம் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் படுதோல்வி அடையவே, வெற்றி பெற்றே ஆகவேண்டும் என அடுத்தடுத்து படங்களை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் அனைத்தும் அவருக்கு தோல்வியையேக் கொடுத்தன. இதனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலனைக் கெடுத்துக் கொண்டார்.
கடைசி காலத்தில் அவர் உடல்நிலை மோசமாகி மிகவும் ஒல்லியாகி, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு போய் சில மாதங்கள் கோமாவுக்கு சென்று அதன் பின்னர் உயிரிழந்தார். இந்நிலையில் இப்போது நடிகர் ராஜேஷ் தான் சாவித்ரியை சந்தித்த அந்த தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “நான் அந்த ஏழு நாட்கள் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போது பக்கத்தில்தான் சாவித்ரி அம்மா வீடு இருந்தது. அதனால் அவரை போய் பார்க்கலாம் என சென்றேன். வேலைக்கார ஆள், ஜெமினி கணேசனுக்கு போன் செய்து அனுமதி பெற்று என்னை உள்ளே விட்டார்.
நான் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டேன். யாரிடமாவது ஒரு கோடி ரூபாய் கொடுத்து இது சாவித்ரிதான் என சொல்ல சொன்னாலும் சொல்லமாட்டார்கள், அப்படி மோசமான நிலையில் இருந்தார். அவர் ஜெமினி சாரைக் காதலித்திருக்கவே கூடாது என நினைத்தேன். எவ்வளவு தர்மங்கள் செய்தவர் அவர். இப்படி அனைத்தையும் இழந்து வாடுகிறாரே எனத் தோன்றியது. அந்த நிலைமையில் கூட தன் கார் சாவியை டிரைவரிடம் கொடுத்துவிட்டு அதை வைத்து பிழைத்துக்கொள் என சொல்லிவிட்டார்” என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…