தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஹ்மான். இவரின் முழு பெயர் ரஷின் ரஹ்மான்.

இவர் மே 23ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு அபுதாபியில் பிறந்தார். ஆனால் இவருடைய முன்னோர்களின் குடும்பம் கேரளாவை சேர்ந்தவர்கள்.

இவர் அபுதாபியில் உள்ள செயின்ட் ஜோசப் பால்ட்வின் ஆண்கள் உயர்நிலை பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். மலப்புரத்தில் கல்லூரி படிப்பை முடித்தார்.

இவர் 1984 ஆம் ஆண்டுவெளியான’ கூடவிடே ‘என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.


இந்த படத்திற்காக கேரளா அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதன் பின்னர் 1984 ஆம் ஆண்டு மட்டும் மலையாளத்தில் 16 படங்கள் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.


இப்படத்தில் உள்ள ‘மழைத்துளி மழைத்துளி’ என்ற பாடல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தமிழில் நிலவே மலரே, புரியாத புதிர், புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம் ,சங்கமம் வாமனன், பில்லா 2, துருவங்கள் பதினாறு போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 1 படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றார் நடிகர் ரஹ்மான்.

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்.

நடிகர் ரகுமான் மெகருநிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ருஸ்டா, அலிசா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் .

மெகருநிஷா இசை புயல் ஏ ஆர் ரகுமான் மனைவி சாயிரா பானுவின் தங்கை. தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

