#image_title
சரியாக நடக்க முடியாத சிறுமி உதவி கேட்ட உடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உதவி செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான அற்புதம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கில் மாஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.
தொடர்ந்து நடிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்தார் ராகவா லாரன்ஸ். 2007 ஆம் ஆண்டு முனி என்ற திரைப்படத்தை இயக்கி சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார். ஹாரர் திரைப்படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்க காஞ்சனா என்ற பெயரில் அடுத்தடுத்து சீரிஸ்களை எடுத்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் ராஜாதிராஜா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஜிகர்தண்டா டுப்லெஸ் உள்ள திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
தனது நடிப்பால் புகழின் உச்சிக்கு சென்றாரோ இல்லையோ தனது உதவும் குணத்தால் மிகப்பெரிய நடிகராக உயர்ந்திருக்கின்றார். கடந்த மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் என்கின்ற அறக்கட்டளையை தொடங்கி இவர் பல மக்களுக்கு உதவி செய்து வருகின்றார். மேலும் இந்த அறக்கட்டளையில் எஸ்ஜே சூர்யா, கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டு பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள்.
முதல் கட்டமாக 10 டிராக்டர்களை 10 ஊர்களுக்கு வழங்கி இருக்கும் ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் ஒரு பள்ளி குழந்தை சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அவர் அந்த வீடியோவில் இதனை ராகவா லாரன்ஸ் மாஸ்டர் இடம் போட்டு காட்டுங்கள் என்று கூறுகிறார்.
உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அந்த குழந்தையை அழைத்து அவர் நடக்க மிகவும் சிரமப்படுவதால் அவரின் அம்மாவுக்கு புது இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி பரிசாக அளிக்கின்றார். இனி நீங்கள் நடந்து போக வேண்டாம் அம்மாவுடன் இந்த வாகனத்தில் ஜாலியாக செல்லலாம் என்று கூறுகிறார். மேலும் உங்கள் காலை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் கட்டாயம் செய்வேன் என்று கூறுகிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…