‘எனக்காக நீங்க இதை செய்யவே வேண்டாம்’… தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் லாரன்ஸ்… என்ன சொன்னாருன்னு தெரியுமா..? 

By Begam on கார்த்திகை 17, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். முதலில் ரஜினியின் உழைப்பாளி மற்றும் ஜென்டில்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் குரூப் டான்ஸராக பணியாற்றினார். அதன் பிறகு முனி திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   

இவர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகராக மட்டுமின்றி பல்வேறு சமூக நலப்பணிகளையும் இவர் செய்து வருகிறார். தனது அறக்கட்டளை மூலம் பல மாற்றத்திறனாளிகளுக்கு பல வகைகளில் உதவி வருகிறார்.

   

Actor Raghava Lawrence

 

அது மட்டும் இல்லாமல் தன் வீட்டிலேயே பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனது ரசிகர்களுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் நல்ல மதிப்பு கொடுப்பவர். தனது ரசிகர்கள் குறித்து ஒருமுறை அவர் பேசும் பொழுது,  “என் படத்தை திரையரங்கில் வந்து பார்த்தால் மட்டும் போதும். என்னை பார்க்க அவர்கள் கூட்டமாக ஆடியோ விழா போன்ற நிகழ்வுகளுக்கு வர தேவையில்லை. ரசிகர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று புத்தாடைகள் வாங்கி போட்டுக்கொண்டு வாடகை வேன் புக் செய்து வருகின்றனர்.

சென்னையில் அறை எடுத்து தங்குகின்றனர். இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகிறது. அதற்கு பதிலாக ரசிகர்கள் ஒன்று திரண்டு என்னை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தால் நானே ஒரு திருமண மண்டபம் புக் செய்து அவர்கள் ஊருக்கு சென்று அவர்களை பார்த்து வருவேன்” என கூறியுள்ளார். இதுபோன்ற மனது எத்தனை ஹீரோக்களுக்கு வரும்? என்று ரசிகர்கள் அவரை தற்பொழுது புகழ்ந்து வருகின்றனர்.