இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘காஞ்சிபுரம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்து , 2007 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இவர் ‘இருவர்’ என்ற தமிழ் திரைப்படத்திற்காக 1998 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார். தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் ‘பிரகாஷ்ராய்’ என்று அழைப்பார்கள். பிரகாஷ் ராய் என்ற பெயரை தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் கே.பாலச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின் படி ‘பிரகாஷ் ராஜ்’ என்று மாற்றி கொண்டார்.

இவர் தமிழ் திரைஉலகில் தோனி, அபியும் நானும், சந்தோஷ் சுப்பிரமணியம், சிங்கம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பீமா என தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1994 நடிகை லலிதா குமாரி என்பவரை மணந்தார். அவர்களுக்கு மோகனா, பூஜா என்று இரண்டு மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளார்.

திருமணம் ஆகி சில ஆண்டுகளில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். 2010 ஆம் ஆண்டு நடன இயக்குனர் போனி வர்மாவை மணந்தார். இவருக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரகாஷ்ராஜ்.

இவர் தற்பொழுது தனது இரண்டாவது மனைவியுடன் நியூயார்க் நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த அழகான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
