#image_title
நடனம், நடிப்பு, இயக்கம் என இந்தியா முழுவதும் இன்றளவில் அசத்தி வருபவர் நடிகர் பிரபுதேவா. ‘இந்தியன் மைக்கேல் ஜாக்சன்’ என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தமிழில் திரைப்படத்தில் முதலில் நடன கலைஞராக அறிமுகமானார். பின்னர் 1989ல் வெளியான ‘இந்து’ திரைப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
இவர் நடிப்பில் வெளியான ‘காதலன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. நடிகர் பிரபுதேவா நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வந்தார். இவர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் மட்டுமல்லாது ஹிந்திலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இப்படி நடிகராகவும், இயக்குனராகவும் திரையுலகில் கலக்கி வருகிறார் நடிகர் பிரபு தேவா.
தற்பொழுது இவர் நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அடுத்ததாக நடிகர் பிரபுதேவா இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். அவருக்கு ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க. தளபதியின் ‘லியோ’ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மடோனா செபஸ்டின் தான் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் .
#image_title
இயக்குனர் சக்தி சிதம்பரம் பிரபுதேவாவை வைத்து ஏற்கெனவே ‘சார்லி சாப்ளின்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தோல்வியே அடைந்தது. இதை தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு தோல்வி கொடுத்த இயக்குனருடன் இணைந்துள்ளார் பிரபுதேவா. 30 வயது நடிகை மடோனா, 50 வயது நடிகரான பிரபுதேவா இருவரும் கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகுமா..? இந்த ஜோடி ரசிகர்களால் வரவேற்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…