#image_title
பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். பார்த்திபன் இயக்கத்தில் உருவான டீன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 13 இளம் வயதினரை மையமாக வைத்து சாகசம் நிறைந்த திரில்லர் கதையாக டீன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது.
டீன்ஸ் படத்தின் திரை கதையும் இசையும் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. அனைத்து இடத்திலும் லாஜிக்கை கரெக்டாக யோசித்து படமாக்கியுள்ளார் பார்த்திபன். இன்றைய தலைமுறை நகருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக டீன்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பார்த்திபன் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் கூறியதாவது, சத்தியமா சொல்றேன் டீன்ஸ் படத்திற்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடமிருந்து கிடைக்கலன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காண இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமாக கொடுக்கிற பாராட்டில நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்துல அழுவது உங்களுக்கு கேட்க வாய்ப்பே இல்ல. இது போதாது.
இன்னும் ஆதரவு தந்து பலரும் பார்க்க உதவி செஞ்சு என்னை சந்தோஷத்தில் சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு Science fiction & fantasy thought- ல் எடுக்கப்பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும். நன்றி: பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு, வரம்: வரவிருக்கும் தூய்மையான வெற்றி, நனைந்த இமைகளோடு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…