Categories: சினிமா

3 ரூபாய் காசு இல்லாம 6-வதுக்கு மேல படிக்க முடில.. ஒயின் ஷாப் வாசல்ல தான்.. 58-வயதில் சாதித்து காட்டிய நடிகர் முத்துக்காளை..

Spread the love

நடிகர் முத்துக்காளை, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக பிடித்த நடிகர். முத்துக்காளை 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். முதலில், நெறைஞ்ச மனசுல என்ற விஜயகாந்த் நடித்த படத்தில், ஒரு சின்ன காமெடி ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து வடிவேலு காமெடி காட்சிகளில் துணை நடிகர்களில் ஒருவராக நடித்தார். என் புருஷன் குழந்தை மாதிரி என்ற படத்தில், மனநலம் பாதித்தவராக வருவார். திருப்பரங்குன்றம் மலைமேல இருந்து விழுந்து செத்து செத்து விளையாடுவோம் என வடிவேலுவை அழைத்து கலாட்டா செய்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் முத்துக்காளை.

சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது ஆர்வம் கொண்டவர் முத்துக்காளை. ஆனால் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படிப்பை தொடர முடியாமல் சினிமாவில் நடிக்க வந்தார். ஆனாலும் அவரது பெற்றோருக்கு முத்துக்காளை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர். கடந்த 2017ம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கழகத்தில் BA வரலாறு படித்து பட்டம் பெற்ற முத்துக்காளை. அடுத்து 2019ம் ஆண்டு MA தமிழ் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார். இப்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்துள்ளார். இது முத்துக்காளை பெற்ற 3வது பட்டம். அடுத்து முனைவர் பட்டம் பெறப்போவதாக சொல்லும் முத்துக்காளைக்கு இப்போது வயது 58 என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நேர்காணலில் முத்துக்காளை கூறுகையில், இப்போதும் கூட ஒயின்ஷாப் வாசலில் நான் படுத்திருப்பதை போன்ற வீடியோக்களே, மீடியாக்களில் அதிகமாக வருகின்றன. நான் மதுபானம் குடிப்பதை விட்டு ஏழு ஆண்டுகள் ஆகிறது. அதில் இருந்து மீண்டு வந்து விட்டேன். என்னை திரும்பி பார்த்தால் ஏதாவது வாழ்க்கையில் ஏதாவது வித்யாசமாக பண்ணியாகனும் என்று ஆசைப்பட்டேன். நான் படிக்கும்போது நிறைய பேரு என்னை கிண்டல் பண்ணினாங்க.

இந்த வயசுல படிச்சு இனிமே இவர் என்ன பண்ணப் போறாரு, ஆனா படிப்புக்கு ஒரு தடை இல்லை. அதை சாதிச்சு காட்டணுமுன்னு ஆசைப்பட்டேன். MA தமிழ் படிச்சேன். ஏன்னா, தமிழ் படிக்கணுமுன்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு. இது மிகப்பெரிய சந்தோஷம். நான் கோடிக்கணக்குல சொத்து வைச்சிருந்தாலும் சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். அந்த டிகிரிகளை தான் கோடிக்கணக்கான சொத்தா வெச்சிருக்கேன். இன்னும் நிறைய ஆசைகள் இருக்கு, என்று கூறியிருக்கிறார் பட்டதாரி முத்துக்காளை.

#image_title

admin

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

4 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

28 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

47 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

51 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

56 minutes ago