தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மன்சூர் அலிகான். அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி என்று பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவருடைய மகன் அலிகான் துக்ளக் கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி இருந்தது. தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் அவர் சென்னையில் 35 லட்சம் ரூபாய் கடன் தொடர்பாக 67 வயது முதியவர் ஒருவரை மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், மண்ணடியில் ஒருவரிடம் என் மனைவியின் நிலத்தை வைத்து 35 லட்சம் ரூபாய் கொடுத்து. பிறகு அவர் என்னிடம் பணத்தை தரவே இல்லை. இது குறித்து காவல் நிலையத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்பே புகார் அளித்து விட்டேன். இதுவரை அந்த நபர் மீது எஃப் ஐ ஆர் கூட போடவில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு சென்று பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என முடிவு செய்தேன். அதற்கும் காவல்துறையினர் எந்த உதவியும் செய்யவில்லை. இப்போது என்னுடைய இரண்டு மகள்களுக்கும் என்னுடைய மகனுக்கும் திருமண வயது வந்துவிட்டதால் பண தேவை நிறைய உள்ளது.
அப்பா கஷ்டப்படுகிறார் என்று நினைத்து நான் அவரிடம் பேசி பணத்தை வாங்கி வருகிறேன் என என் மகன் அவரின் வீட்டுக்கு சென்றார். அப்போது தெருவில் இருந்து தான் பேசியுள்ளான். அந்த நபர் உடனே காவல்துறைக்கு போன் செய்து போலீசாரை வர வைத்து விட்டார். அவர்களும் வந்து என் மகனை கைது செய்து எஃப் ஐ ஆர் போட்டு விட்டனர். உடனே என் மகன் கைது என செய்தியும் வந்து விட்டது. 35 வருடமாகவே மன்சூர் அலிகான் மீது காழ்ப்புணர்ச்சி உடன் தான் அந்த பத்திரிக்கையை நடத்துகிறார்கள்.
தற்போது நான் ஒரு ஆல்பம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கின்றேன். அது விரைவில் வெளிவர உள்ளது. நான் எப்போதெல்லாம் அடுத்த அடி எடுத்து வைக்கிறேனோ அப்போதெல்லாம் என்னை அவமானப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். காவல்துறையினர் என்னை விஜய், சூர்யா, அஜித் போல அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல் போலீஸ் புகலடைய வேண்டும் என்பதற்காக என் மகன் மீது எஃப் ஐ ஆர் போட்டு ஊடகத்திற்கு செய்தி கொடுத்தால் என்ன அர்த்தம். பணம் வாங்கிய நபர் அந்த பணத்தை தராமல் வேறு ஒருவருக்கு பணத்தை கொடுத்து சம்பாதிக்கிறான். அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் பணம் கேட்க போனவர்களிடம் இப்படி நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம். என் மகனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று மன்சூர் அலிகான் அந்த பேட்டியில் கண்ணீருடன் பேசி உள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…