தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் மனோபாலா. திருவாரூர் அருகே நல்லிணத்தை பூர்வீகமாக கொண்ட மனோபாலா சிறுவயது முதலை சினிமா மீது தீராத காதல் கொண்டிருந்ததால் கல்லூரி படிப்பை முடித்த உடனே வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் ரயில் ஏறி சென்னைக்கு கிளம்பினார். இங்கு வந்து தனது அக்காவின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தங்கி படங்கள் பார்ப்பதை வேலையாகவும் சினிமாவில் உதவி இயக்குனராக சேருவதை இலக்காகவும் கொண்டு செயல்பட்டார். பிறகு ஒரு பத்திரிக்கையாளராக தனது பணியை தொடங்கிய மனோபாலாவிற்கு நடிகர் கமல்ஹாசனின் நட்பு கிடைத்தது. அதன் மூலம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
உதவி இயக்குனராக புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மனோபாலா, நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக், நிழல்கள் மற்றும் அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாரதிராஜாவிடம் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆகாய கங்கை என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து படங்களிலும் நடிக்க தொடங்கினார். ரஜினி மற்றும் கமல் என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் மனோபாலா சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் இயக்குனராகவும் தனது சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த மனோபாலா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மனோபாலா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திடீரென மனோபாலாவுக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் போன சமயத்தில் மிகுந்த வறுமையில் இருந்து உள்ளார். அப்போது ஒரு நாள் நான் திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் உருக்கமாக வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது என் கையில் வெறும் ஒன்றரை ரூபாய் மட்டுமே இருந்தது. அந்த காசை வச்சி தோசை வாங்கி சாப்பிட்டு இருந்தேன்.
அப்போ டைரக்டர்னு ஒரு குரல் வந்துச்சு. திரும்பி பார்த்தா அங்க கலைமணி நின்று கொண்டிருந்தார். உங்கள பாத்து ரெண்டு வருஷம் ஆச்சு, உங்கள தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன், இந்தாங்க 50 ரூபாய் புடிங்க என்னோட அடுத்த படத்துக்கு நீங்க தான் டைரக்டர் என்று சொல்லிட்டு போனாரு. அந்த 50 ரூபாய் நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். அப்போ நான், கலைமணி மற்றும் இளையராஜா காமினேஷன் என்றால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும். அப்படி பிள்ளை நிலா திரைப்படத்தை நான் இயக்கிய பிறகு அடுத்த நாளே என்னுடைய வாசலில் 35 ப்ரொடியூசர் வந்து நின்னாங்க. அந்த ஒரே நாள்ல என்னுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் மாறிடுச்சு என்று மனோபாலா அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…