மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி இதுவரை 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரள மாநில திரைப்பட விருதுகள், 13 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு மம்முட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் தமிழில் பேரன்பு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. தளபதி, மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் மம்முட்டி நடித்துள்ளார்.

மம்முட்டிக்கு தற்போது 72 வயது ஆகிறது. சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் ரிலீசான கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர், பிரம்மயுகம், டர்போ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. மம்முட்டி சினிமாவிற்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மம்முட்டி அயராது உழைத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இன்று மம்மூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மம்முட்டியின் சொத்து மதிப்பு பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மொத்தமாக 370 கோடி ரூபாய் சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. சினிமா மட்டுமின்றி வேறு சில முதலீடுகள் மூலமாகவும் மம்முட்டிக்கு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. அவருக்கு கொச்சியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமாக பங்களா இருக்கிறது. இது போக பல சொகுசு கார்களையும் மம்முட்டி சொந்தமாக வைத்துள்ளாராம்.

