#image_title
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் மதுரை மோகன் இன்று மறைந்துள்ளார். அவரின் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டு காலமாக பயணம் செய்தவர் மதுரை மோகன். இவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் பிரபல நடிகர்களின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்திருந்த முண்டாசுப்பட்டி படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது.
இதைத்தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதியின் வீரன், சமுத்திரக்கனியின் வினோதய சித்தம் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து அசத்தியவர். இன்று தன் சொந்த ஊரான மதுரையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமாருக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார். தற்பொழுது ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கல்கள்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அவரின் பதிவு…
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…