Categories: சினிமா

‘ஸ்டார்’ பட ட்விட்டர் விமர்சனம்.. சூப்பரா, இல்ல சுமாரா..? ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா நடிகர் கவின்..!

Spread the love

சினிமாவைப் பொறுத்தவரை டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதில் ஒரு சில திரைப்படங்களே நல்ல வெற்றியை கொடுக்கின்றது. மற்ற படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் பலவும் எதிர்பாராத அளவுக்கு வெற்றியை கொடுத்து விடுகின்றது.

அப்படி கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் முழுவதும் பாசிட்டிவாக இருந்து வருகின்றது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக அறிமுகமான கவின் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த கவின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதது. பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதனால் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் நடிகர் கவின்.

தற்போது பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கும் ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் இன்று வெளியாகி இருக்கின்றது. ரைஸ் என்டேர்டைன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். இப்படத்தில் லால், அதிதி போங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் இருந்து வெளியான பாடல், டிரைலர் அனைத்தும் வைரலானதை தொடர்ந்து இன்று இப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் அனைத்தும் பாசிட்டிவாக இருக்கின்றது. கவின் நடிப்பு அபாரமாக இருக்கின்றது என்று பலரும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இடைவெளி, கிளைமாக்ஸ் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கின்றது. பல மாதங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் வெளியாகி இருக்கின்றது என twitter பக்கத்தில் பலரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். கட்டாயம் கவின் இப்படத்தின் மூலம் ஹேட்ரிக் வெற்றியை பெறுவார் என கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

7 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

7 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

7 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

7 மணத்தியாலங்கள் ago