ப்ளாக் பெல்ட் வாங்கிய முதல் தமிழர்… சினிமாவிலும் கலக்கிய கராத்தே மணி… குறுகிய காலத்திலேயே மறைந்த சோகம்..

By vinoth

Updated on:

கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்ற முதல் தமிழர் கராத்தே மணி . பத்தாம் நிலையில் அவர் கருப்பு பெல்ட் வாங்கினார். தமிழகத்தில் முதல் முதலாக கராத்தே பள்ளியை நடத்தி வந்த அவர், தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க பணியமர்த்தப்பட்டார்.

ஆனால் அவருக்கு சினிமா ஆசை தோன்றவே, 1980-ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் இவர் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் வெற்றியால் கராத்தே மணிக்கு மிகப்பெரிய டிமாண்ட் உருவானது. தொடர்ந்து தேவர் பிலிம்ஸின் ‘ரங்கா’, ‘அஞ்சாத நெஞ்சங்கள்’’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

   

ரங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சொல்லப்போனால் ரஜினிகாந்த் ஒரு நெகட்டிவ் தன்மை கொண்ட கதாபாத்திரத்திலும் மணி நல்லவன் வேடத்திலும் நடித்திருந்தனர். இதனால் கராத்தே மணி குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தைப் பிடித்தார்.

தொடர்ந்து பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களோடு படங்களில் நடித்த கராத்தே மணி, தான் கராத்தேவில் பிளாக் பெல்ட் பட்டம் பெற்றுவிட்டு ஒன்றும் தெரியாத இந்த ஹீரோக்களிடம் அடிவாங்கி தோற்றுப் போவதா என ஒரு எண்ணம் அவருக்கு உருவாகியுள்ளது. அதனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களோடு அவருக்கு பிணக்கம் எழுந்துள்ளது.

அவரை முக்கியக் கதாபாத்திரத்தில் வைத்து உருவாக்கப்பட்ட படம் ஒன்று அவர் செய்த பிரச்சனையால் படம் நின்று போயுள்ளது. அதனால் அவரை படத்தில் கமிட் செய்ய தயாரிப்பாளர்கள் அஞ்சியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் கராத்தே மணிக்கு சில கெட்டப் பழக்கங்களும் இருந்ததாம். மேலும் அவருக்கு இருந்த வேறு சில கெட்டப் பழக்கங்களாலும் அவரின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கபட்டுள்ளது. இதனால் அவர் 1993 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவரின் மறைவு தமிழ் தற்காப்புக் கலைக்கும் தமிழ் சினிமா உலகுக்கும் ஒரு பெரிய இழப்பாக அமைந்தது.