பிரபல இயக்குனருக்கு விலை உயர்ந்த காரை வாங்கி கொடுத்த உலகநாயகன்….  லோகேஷை தொடர்ந்து அடுத்து இவரா?… தீயாய் பரவும் தகவல் இதோ…

By Begam on மாசி 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியடைந்தது. இவர் தனது ரசிகர்களால் ‘உலகநாயகன்’ என்று கொண்டாடப்பட்டு வருகிறார்.

   

தற்பொழுது நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘விக்ரம்’.

   

 

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்தது. மேலும் இத்திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு உலகநாயகன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்ததார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மட்டுமின்றி இத்திரைப்படத்தில் பணி புரிந்த 13 துணை இயக்குனர்களுக்கு 13 பைக்கை பரிசாக அளித்தார். இதை தொடர்ந்து கமலஹாசன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

தற்பொழுது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக இவர் அ வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இன்னும் படத்தின் படப்பிடிப்பு தொடங்காத நிலையில், இயக்குனர் அ வினோத்திற்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கமலஹாசன் வாங்கி கொடுத்ததாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இயக்குனர் வினோத்திற்கு உலகநாயகன் கார் வாங்கி கொடுத்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.