Categories: CINEMA

வெளிநாட்டில் காதலியுடன் ஊர் சுற்றும் நடிகர் காளிதாஸ் ஜெயராம்…. வெளியான புகைப்படங்கள்…

தற்போது மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமனின் மகன் தான் இவர். காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தை விட தமிழில் முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்கள் வரை இவருக்கு மிகப்பெரிய பிரேக் எதுவும் கிடைக்காத நிலையில் கடந்த வருடம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் என்கிற அந்தாலஜி படம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்தது என தற்போது இவரது திரையுலக பயணத்தில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவர் தனது குடும்பத்துடன் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தார்.

அந்த புகைப்படத்தில் ஜெயராம் குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை தவிர ஒரு இளம் பெண்ணும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

அந்தப் பெண் யார் என்று அனைவர் மனதிலும் கேள்வி எழுந்த நிலையில் அவரைப் பற்றிய விவரங்கள் வெளியானது.

அதாவது அவர் தாரணி காளிங்கராயர் என்ற மாடல் தான். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் என்ற அழகி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காதலர் தினத்தில் காளிதாஸ் தான் சிங்கிள் இல்லை என அறிவித்தார். தன்னுடைய காதலி தாரிணி கலிங்கராயருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது தனது காதலியுடன் காளிதாஸ் ஜெயராம் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

அடேங்கப்பா..! இது மாஸ்டர் பிளானால்ல இருக்கு.. கல்லா கட்ட கரெக்டான நேரத்தில் இந்தியன் தாத்தாவை களம் இறக்கும் லைகா..!

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…

8 hours ago

சிம்புவைக் கண்டு தெரிச்சி ஓடிய 2 டாப் ஹீரோஸ்.. தக் லைஃப் படத்தில் STR நடிக்க இவ்வளவு பெரிய பிளாஷ் பேக்கா..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…

8 hours ago

ஆள் அடையாளமே தெரியாம மாறிய 90’ஸ் பிரபல நடிகை அஞ்சு.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…

9 hours ago

தளபதியின் கடைசி திரைப்படத்தை தயாரிக்க போது இந்த நிறுவனம் தானா..? விரைவில் வெளியாக போகும் அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…

10 hours ago

மாற்றம் சேவை மூலம் அடுத்த நபரை தேடி பயணம்.. அன்பால் ராகவா லாரன்ஸை மகிழ வைத்த மக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…

12 hours ago

43 வயதிலும் முரட்டு சிங்கிள்.. மார்க்கெட் இழந்தாலும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக  இருக்கும் அனுஷ்கா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…

13 hours ago