தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலையரசன். இவர் முதன்முதலில் பா ரஞ்சித் இயக்கிய கார்த்திக் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதலில் வெப் சீரிஸ் களில் அடித்து வந்த நிலையில் அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மற்றும் 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் ஆகிய திரைப்படங்களில் இவர் கேமியோ ரோலில் நடித்தார்.
இவர் 2019 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பேட்ட திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்த சிங்கார் சிங் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர்.பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்திலும் தீபன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வெற்றி செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். சமீபத்தில் வாழை படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடைத்தை பிடித்தார். தற்போது மெட்றாஸ்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தாவும் நடித்துள்ளார். இந்த நிலையில் கலையரசன் தற்போது Minicooper – S 3DOOR என்ற விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…