தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜீவாவின் மனைவியை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்…

By Archana on ஆனி 30, 2023

Spread the love

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ஜீவா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருடைய தம்பிதான் நடிகர் ரமேஷ் சித்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் நடிகர் ஜீவா.

   

இவர் 1983 இல் இந்தியக் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை மையப்படுத்திய ’83’ திரைப்படத்தில் நடித்திருந்தார். பான் இந்தியா திரைப்படமான இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜீவாவிற்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

   

 

இதைத்தொடர்ந்து கோல்மால், ஜெமினி கணேசன, வரலாறு முக்கியம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். நடிகர் ஜீவா, சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்பொழுது நடிகர் ஜீவா இணையத்தில் தனது மனைவியுடன் இணைந்து  எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட்  புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்…