#image_title
விஷால் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். இவரது முழு பெயர் விஷால் கிருஷ்ணா ரெட்டி என்பதாகும். இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபல தயாரிப்பாளர் ஆவார். விஷால் ஆக்சன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 2004 ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு சண்டக்கோழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விஷால்.
#image_title
#image_title
தொடர்ந்து திமிரு சிவப்பதிகாரம் தாமிரபரணி மலைக்கோட்டை தோரணை தீராத விளையாட்டுப் பிள்ளை அவன் இவன் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷால். நல்ல உயரமும் சிக்ஸ் பேக் பாடி கொண்டிருப்பதால் எந்த கதாபாத்திரம் ஆனாலும் அவருக்கு பொருந்தியது. மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர் விஷால். தொடர்ந்து துப்பறிவாளன் இரும்புத்திரை சண்டக்கோழி 2 அயோத்தியா மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் விஷால்.
தற்போது விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஷால் நடித்த செல்லமே படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜெயபிரகாஷ், விஷாலை நான் முக்கியமாக செல்லமே படத்தில் அறிமுகப்படுத்தியதற்கு காரணம் அவருடைய அண்ணன் தான். அவருடைய அண்ணன் எனக்கு நெருங்கிய நண்பன். அதனால் தினமும் அவருடைய அண்ணன் கூட என்னோட ஆபீஸ்க்கு வருவார். அப்போ அங்கு வரும் டைரக்டர் எல்லாமே யாரு இவரு ஹீரோ மாதிரி இருக்காருன்னு சொல்வாங்க.
அப்படியே சொல்லி சொல்லி ஹீரோ ஆகிட்டாரு. செல்லமே படத்துல அவரு நடிச்சப்போ எனக்கு கொஞ்சம் நெருடலா இருந்துச்சி. ஏன்னா முதல் அறிமுகமாகிற பையன் பாத்ததும் லவ் பண்ணி கல்யாணம் பன்னுனாரேனு நினச்சேன். செல்லமே பட ஆடியோ ரிலீஸ் பண்ணும்போது, நான் மேடையி பேசும்போது கருப்பா, உயரமா ஒரு பையன்ன்னு சொன்னேன். உடனே அவங்க அம்மா என் பையனை எப்படி நீங்க கருப்புனு சொல்லலாம்னு கேட்டுட்டாங்க” என்று பேசியுள்ளார்.
திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை…
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விழிப்புணர்வு…
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது…
தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…
சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…