Young Couple-க்கே டப் கொடுக்குறாங்களே.. மனைவியுடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் ஜெயம் ரவி(வீடியோ)..

By Begam on ஐப்பசி 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து  எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும் ,சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, தனி ஒருவன், டிக் டிக் டிக் போன்ற தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் , பொன்னியின் செல்வன் 2’  திரைப்படங்களில் நடித்துள்ளார். கலவையான விமர்சனம் இப்படத்திற்கு இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

   

 

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக இறைவன், சைரன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இரண்டுமே எதிர்பார்ப்புக்குரிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி.

இவர் தற்பொழுது தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த அழகிய வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘ கியூட் couples’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Aarti Ravi (@aarti.ravi)