பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகர் ஜெயம் ரவி.. இவர் எதுக்கு அங்க போறாரு..? வெளியான ஷாக்கிங் அப்டேட்…

By Begam

Published on:

விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் களமிறக்கப்பட்டனர். அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 42 நாட்களை நிறைவு செய்துள்ளது .

   

பல்வேறு பிரச்சினைகள் நிறைந்த இந்த  பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது செல்ல போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அகிலன், இறைவன் போன்ற  திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து 2024 பிரதர், சைரன், ஜெனி மற்றும் உலக நாயகனின் கமல்ஹாசனின் Thug life உள்ளிட்ட நான்கு திரைப்படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் விரைவில் திரைக்கு உள்ளது.

இத்திரைப்படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை உலக நாயகன் கமலஹாசன் நவம்பர் 11ம் தேதியான இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த டீசரை வெளியிட இருக்கின்றனர் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் ஜெயம் ரவி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளாராம். தற்போது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.