“அவன வளர்த்து விட்டதே நான் தான்”… கேஜிஎஃப் யாஷ் பற்றி நடிகர் ஜெய் ஆகாஷ் பரபரப்பு பேட்டி..!!

By Nanthini on ஆவணி 13, 2023

Spread the love

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். பிறகு கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

   

ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம்  கடந்த வருடம் வெளியானது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக பலம் வருகிறார் நடிகர் யாஷ். தற்போது யாஷ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎப் 3 பாகத்தில் நடிக்க உள்ளார்.

   

 

இந்நிலையில் பிரபல நடிகரான ஜெய் ஆகாஷ் சமீபத்தில் அடித்த பேட்டி ஒன்று பரபரப்பு கிளப்பியுள்ளது. அதாவது அந்த பேட்டியில் கேஜிஎப் யாஷை வளர்த்து விட்டதே நான் தான். சினிமாவை விட்டுச் சென்று சீரியலில் நடிக்கப் போவதாக கூறிய அவனை அழைத்து தோல் தட்டி கொடுத்து சாப்பாடு போட்டு அவனை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது நான்தான் என்று அவர் பேசி உள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Friday Facts இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@fridayfactsofficial)