தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் 2010ல் வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்பொழுது இவர் இயக்குனர் சுசி இயக்கத்தில் உருவாகும் நூறு கோடி வானவில் மற்றும் டீசல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த ஹரிஷ் கல்யாண் இரண்டாவது 2 ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி வழங்கியுள்ளார். நாம் அனைவரும் அறிவோம் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை வாசிகள் தற்பொழுது இருப்பிடத்தை இழந்து சாப்பிட உணவு இல்லாமல் கஷ்டப்படுவதை.

பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த அளவு உதவியை அவர்களுக்கு செய்து வருகின்றனர். தற்பொழுது நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘Cheif Minister Public Relief Fund ‘ -ற்கு 1, 00, 000 ரூபாயை வழங்கியுள்ளார். தற்பொழுது ரசிகர்கள் அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பாக அவரே வெளியிட்ட பதிவு…
My humble contribution.
கை கோர்ப்போம் #Chennai ????#ChennaiFloodRelief #chennaifloods @CMOTamilnadu pic.twitter.com/CiqBV4SCsm— Harish Kalyan (@iamharishkalyan) December 6, 2023
