#image_title
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, நடிகராக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். இவரது தங்கைதான் விடுதலை படத்தில், நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். ஜிவி பிரகாஷ்குமார், தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது இந்தி டைரக்டர் அனுராக் காஷ்யப் இயக்கும் ஒரு வெப்சீரிஸ்சில் ஜிவி பிரகாஷ்தான் நாயகனாக நடிக்க உள்ளார். இந்நிலையில், மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, இசையமைப்பாளர், ஜிவி பிரகாஷ்குமார் இடையே நடந்த சில விஷயங்களை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
அந்த நேர்காணலில் பிஸ்மி கூறியதாவது, தனுஷூம் ஜிவி பிரகாஷூம் ஒரு கட்டம் வரை நண்பர்களாக இருந்தது உண்மைதான். அதன்பிறகு, ஜிவி பிரகாஷ் இசையமைக்க வந்த பட வாய்ப்புகளை எல்லாம் தனுஷ் கெடுக்க ஆரம்பிச்சிட்டார். அதுக்கு காரணம், அவர் அனிருத்தை பிரமோட் செய்துக்கொண்டு இருந்தார். அவர் தனுஷின் உறவினர் என்பதால், ஜிவி பிரகாஷ்க்கு வந்த பல வாய்ப்புகளை, இயக்குநர்களிடம் பேசி அனிருத்துக்கு மாற்றி விட்டார். இதனால் கடுப்பான ஜிவி பிரகாஷ், தனுஷை தாக்கி டிவிட்டரில் பதிவுகள் எல்லாம் போட்டிருந்தார்.
பிரபல பத்திரிகையில் சிறந்த நடிகராக விஜயை அந்த ஆண்டில் தேர்வு செய்திருந்தனர். அந்த செலிபரட்டியை பேட்டி எடுத்து அவர்கள் போட வேண்டும். அதற்காக விஜயை அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. ஜிவி பிரகாஷூக்கு மெசேஜ் அனுப்பி, விஜயை தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளனர். அவரும் முயன்று பார்த்துவிட்டு முடியாது என்று சொல்லி இருக்கிறார். இதையடுத்து அந்த பத்திரிகை, அந்த ஆண்டின் சிறந்த நடிகர் தனுஷ் என அறிவித்து, அவரை பேட்டி எடுத்து அதை பிரசுரம் செய்துள்ளது.
அதைப்பார்த்து கோபமடைந்த ஜிவி பிரகாஷ், நேற்று வரைக்கும் சிறந்த நடிகர் விஜய்ன்னு சொல்லிட்டு, இப்போ எப்படி அது தனுஷா மாறினாருன்னு கண்டபடி திட்டி பதிவு போட்டிருக்கிறார். இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. வளர்ந்த பிறகு ஒரு கட்டத்தில் அனிரூத், தனுஷை கழட்டி விட்டுள்ளார். அப்புறம் வெற்றிமாறன் மூலம் ஜிவி பிரகாஷிடம் தனுஷ் சமாதானம் பேசியதால், இப்போது இருவரும் பழையபடி நண்பர்களாக உள்ளனர். என்று அதில் பிஸ்மி கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…