Categories: சினிமா

தனக்கு வில்லனாக நடிக்கக் கேட்ட ஹீரோ… நாசூக்காக No சொல்லிய தேனிசைத் தென்றல் தேவா- யார் அந்த நடிகர்?

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன்  இசையால் புத்துயிர் ஊட்டினார்.

தேவாவின் இசையறிவைப் பற்றி பேசிய ரஜினிகாந்த்  பாட்ஷா படத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்போது தேவாவிடம் படத்தைப் பற்றிக் கேட்டேன். என்ன தேவா சார் படம் அண்ணாமலை போல் ஹிட் ஆகுமா என்று, அப்போது தேவா, “என்ன சார்..! இப்படிக் கேட்டுட்டீங்க பாட்ஷா பத்து அண்ணாமலைக்குச் சமம் சார்“ என்று உணர்ச்சியோடு கூறினார். அதன்பிறகே நம்பிக்கை வந்தது. அந்த அளவிற்கு தனது இசையால் பாட்ஷா படத்தை வேற லெவலில் கொண்டு சேர்த்திருந்தார் தேவா.. “ என்று பக்கத்தில் தேவாவை வைத்துக்கொண்டே ஒரு மேடையில் பேசியுள்ளார் ரஜினிகாந்த். தேவா சொன்னது போலவே படம் பிய்த்துக்கொண்டு ஓடியது.

இந்நிலையில் தேவா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் அவரை யாராவது நடிக்க அழைத்திருக்கிறார்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தேவா “பலர் அழைத்திருக்கிறார்கள். ஆனால் நான்தான் நடிக்கவில்லை. எனக்கு வசனங்களை மனப்பாடம் பண்ணி பேச வராது. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். தனுஷ் கூட ஒரு படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டார். சென்னை பாஷை பேசும் ஒருவர் வேண்டும். நீங்கள்தான் சரியாக இருப்பீர்கள் என்று கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

2 minutes ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

11 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

23 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

25 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

28 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

31 minutes ago