#image_title
பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் புரசைவாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர்கள் கௌதம் வாசுதேவன் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்டார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு காக்க காக்க, பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிறப்பாக நடித்தார். கம்பீரமான குரலுக்கும் வில்லத்தனத்திற்கும் பெயர் பெற்றவர் பாலாஜி. டேனியல் பாலாஜியின் உடல் ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக நடிகர் டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்துள்ளார்.
இந்த நிலையில் புரசைவாக்கத்தில் இருக்கும் நிலத்தில் டேனியல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உடனே மருத்துவர்கள் அங்கு சென்று டேனியல் பாலாஜியின் கண்களை தானம் பெற்றனர். இறந்தும் கூட இரண்டு பேருக்கு வாழ்வளித்துள்ளார் டேனியல் பாலாஜி. அவரது இறப்பிற்கு திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#image_title
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…