Categories: சினிமா

இவ்ளோ நாளா எங்க சார் ஒளிச்சி வச்சிருந்திங்க?? நடிகர் போஸ் வெங்கட்டுக்கு இவ்ளோ பெரிய மகளா இருக்காரா..

Spread the love

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் போஸ் வெங்கட். இவர் தனது  17 வயதில் நடிப்பிற்காக சென்னை குடியேறினார். தொடக்க காலத்தில் இவருக்கு கலைத்துறையில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.சன் டிவியின் மூலமாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘மெட்டி ஒலி’. இந்த தொடரில் நடித்தது மூலமாக இவர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.

 

அதைதொடர்ந்து பாரதிராஜாவின் இயக்கத்தில்  ஈரநிலம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதைதொடர்ந்து  திமுக தலைவர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்த “கண்ணம்மா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், அவருடைய கதை, வசனத்தில் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர்  தமிழில் சிவாஜி ,மருதமலை, தாம் தூம், சரோஜா, சிங்கம், கோ, யாமிருக்க பயமே, 36 வது வயதினிலே, கவண், தீரன் அதிகாரம் ஒன்று, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக இருந்து தற்போது இயக்குனராக மாறியுள்ளார் .2020 ஆம் ஆண்டு ‘கன்னி மாடன்’ என்ற  திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார்.

 

இவர் நடிகை சோனியாவை திருமணம் செய்து கொண்டார் .இவருக்கு தேஜஸ்வின் என்ற மகனும் , பவதாரணி எனும் மகளும் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் போஸ் வெங்கட்டின் மனைவி சோனியா. இவர் தற்பொழுது தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி அவரது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

11 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago