‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.
இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சமீபத்தில் இவர்களது திருமணமும் திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இன்டெரியில் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் சில பெண்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் சிலர் ‘இவ்வளவு அழகா இருக்க நீங்க ஒண்ணுமே இல்லாத கீர்த்தி பாண்டியனை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று விமர்சித்தும் வந்தனர்.
தற்பொழுது இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அசோக் செல்வன். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ‘இந்த உலகின் மிக அழகான பெண்ணுடன்’ என்று கேப்சனிட்டு பதிவு செய்துள்ளார். இப்பதிவினை பார்த்த விமர்சித்த பெண்கள் பலர் தற்பொழுது செம கடுப்பில் உள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அசோக் செல்வன்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…