தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் ஆர்யா- சயீஷா தம்பதியினர்.

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’ என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

இதைத் தொடர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைக்கு ஆரியானா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது மனைவி சாயிஷா மற்றும் தனது மகள் அரியானாவுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது

