தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் ஷர்ஜா குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ‘ஆக்சன் கிங் அர்ஜுன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் நிவேதிதா என்ற கன்னட நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, ரஞ்சன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிப்பு மற்றும் மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் ‘சொல்லி விடவா’ என்ற படத்திலும் நடித்தார்.
பட வாய்ப்புகள் இன்றி தற்பொழுது உள்ளார். சினிமாவில் மார்க்கேட் இல்லாததால் குடும்பத்தொழிலை கவனித்து வரும் ஐஸ்வர்யா ரசிகர்கள் மத்தியில் தனது பிரபலம் குறையாமல் இருக்க சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்தும் வருகிறார்.
நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
1980களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது வெடித்துள்ள நிதி…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 73-ல், படீல் பகுதியிலிருந்து நந்தூர் நோக்கி சுற்றுலா கார் ஒன்று…
சேலம் மாநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேசப் பெண் கொடூரக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி,…
தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பி.ஏ முதலாண்டு கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டின் அருகே வரட்டிகளுக்காக எருமை…
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், மாநில அரசியலில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள்…