1990களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் சினிமாவில் பிஸியாக காணப்படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
இவர் தற்பொழுது வெளியான நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் கூட ஹரால்டு தாஸாக நடித்து அசத்தியிருந்தார். நடிகர் அர்ஜுன் நிவேதிதா என்ற கன்னட நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, ரஞ்சன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிப்பு மற்றும் மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கும் நடிகர் தம்பி ராமையா மகனான உமாபதி ராமையாவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் சினிமாவில் கால்பதிக்கவில்லை. இவர் அன்றாடம் நம் உண்ணும் பழங்களிலிருந்து தூக்கி எறியும் பழத்தோல்களை வைத்து ஹேண்ட் பேக்கை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார் .
பழங்களின் தோளிலிருந்து பைகள் உருவாக்கப்படுது உலகிலேயே இதுவே முதல் முறை. இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும், அவர் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இத்தனை நாளா இந்த செல்லத்த எங்கதான் மறைச்சு வைச்சிருந்தீங்க’ என்றும், பாக்க ஹீரோயின் போல இருக்காங்களே’ கமெண்ட் செய்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…