Categories: சினிமா

புஷ்பா 2 வசூல் எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.. அடுத்து பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் அல்லு அர்ஜுன்..!

Spread the love

வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் செம்மர கடத்தல் காரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்து அசத்தியுள்ளனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் பக்கா கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆன ஐந்து நாட்களிலேயே 900 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் ஆயிரம் கோடி வசூலை எட்டி விடும் என்பதால் அல்லு அர்ஜுனனின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமாக புஷ்பா 2 திரைப்படம் மாறவுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பான் இந்திய அளவில் சமூக வரவேற்பு கிடைத்து வருகின்றது. புஷ்பா 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸில் புஷ்பா மூன்றாம் பாகத்திற்கான லீடு கொடுத்து முடித்திருப்பதால் அடுத்ததாக அல்லு அர்ஜுன் புஷ்பா 3 திரைப்படத்தில் நடிக்கலாம் என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் தற்போது அப்படத்தை ஆறு ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு எடுக்கும் ஐடியாவில் உள்ள நிலையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதாவது தெலுங்கில் அனைத்து நடிகர்களும் நடிக்க ஆசைப்படும் திரீ விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே இருவரும் இணைந்து அல வைகுந்த புரமுலோ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைய உள்ளனர். இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஊடகம் ஒன்றில் பேசிய போது, இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. ராஜமவுலி ஸ்டைலில் அசத்தலான இதுவரை திரையுலகம் காட்டாதபடி விஷுவல் காட்சிகளை கொண்ட படமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளது என்று பில்டப் கொடுத்துள்ளார். இதனால் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago